TNPSC Thervupettagam

சர்வதேச அர்கேனியா தினம் – மே 10

May 12 , 2021 1205 days 446 0
  • 2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது இந்த தினத்தினை அறிவித்துள்ளது.
  • இதற்கான தீர்மானமானது மொரோக்கோவால் சமர்ப்பிக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 113 உறுப்பினர் நாடுகளின் ஒப்புதலுடன் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • வறண்ட மற்றும் மிதமான வறட்சியுடைய பகுதிகளில் வளரும் ஆர்கர் மரமானது (அர்கேனியா ஸ்பினோசா) மொரோக்கோவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள துணை சஹாரா என்ற பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டதாகும்.
  • ஆர்கன் மரமானது வருமான உயர்வை ஏற்படுத்துதல், நெகிழ்திறனை அதிகரித்தல் மற்றும் காலநிலைக்கான தகவமைப்பினை மேம்படுத்துதல் போன்று பலவகையில் பயன்படக் கூடியதாகும்.
  • உள்ளாட்சி நிலையில் (பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த வகையில்) நிலையான மேம்பாட்டின் மூன்று பரிமாணங்களையும் அடைவதில் இந்த மரமானது மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்