சர்வதேச அறிவு சார் சொத்துக் குறியீட்டில் இடம் பெற்ற உலகின் 55 முன்னணி நாடுகளில் இந்தியா 42வது இடத்தில் உள்ளது.
இந்தக் குறியீடானது அமெரிக்க வர்த்தகச் சபையினால் வெளியிடப்பட்டது.
2021 ஆம் ஆண்டில் 40வது இடத்திலும், 2014 ஆம் ஆண்டில் 25வது இடத்திலும் (மதிப்பீடு செய்யப் பட்ட 25 நாடுகளில்) இருந்த இந்தியாவிற்கு இந்த ஆண்டின் தரவரிசை ஒரு பின்னடைவாகும்.
இந்தக் குறியீட்டில் அமெரிக்கா முதலிடத்திலும், ஐக்கியப் பேரரசு மற்றும் பிரான்சு ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.