TNPSC Thervupettagam

சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீடு – 2018

February 10 , 2018 2352 days 875 0
  • US Chamber of Commerce அமைப்பினால் வெளியிடப்படும் சர்வதேச அறிவுசார் சொத்துரிமை குறியீட்டின் 2018-ஆம் ஆண்டிற்கான பதிப்பில் 50 நாடுகளுள் இந்தியா 44-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இவ்வாண்டிற்கான குறியீட்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து முறையே முதலிரண்டு இடங்களைப் பிடித்துள்ளன.
  • ஜெர்மன், ஜப்பான், சுவீடன் ஆகியவை அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.
  • அறிவுசார் சொத்துரிமை குறியீடானது 50 நாடுகளில் நிலவும் அறிவுசார் சொத்துரிமை சூழலை மதிப்பிடுவதோடு, நாடுகளின் சர்வதேச ஒப்பந்தங்கள், பதிப்புரிமை, காப்புரிமை, தொழிற் குறியீடுகள், வர்த்தக இரகசியங்கள் மற்றும் ஒப்பந்த அமலாக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்துகின்றன.
  • இக்குறியீட்டின் கடந்த ஆண்டிற்கான பதிப்பில் இந்தியா 43-வது இடத்தைப் பிடித்து இருந்தது.
  • தரவரிசையில் பின்னடைந்திருப்பினும், அளவுருக்களின் மீதான மதிப்பீட்டின் அடிப்படையில் அனைத்து நாடுகளுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமான மதிப்பெண் சதவீதத்தை இந்தியா பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்