TNPSC Thervupettagam

சர்வதேச அளவில் தொழுநோய் நிகழ்வுகள் - WHO

January 29 , 2019 2128 days 667 0
  • உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட புதிய தொழுநோய் நிகழ்வுகள் கண்டறியப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்  (World Health Organization – WHO) கூறியுள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட நிகழ்வுகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன.
  • 2017 ஆம் ஆண்டில் புதிதாக கண்டறியப்பட்ட தொழுநோய் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்களிப்பு 60 சதவிகிதமாகும். மொத்தம் கண்டறியப்பட்ட 2.10 லட்சம் நிகழ்வுகளில் இந்தியாவின் பங்கு 1.26 இலட்சமாகும்.
  • 2008 ஆம் ஆண்டு முதல் புதிய தொழுநோய் நிகழ்வுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை தீடிரென உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியா மற்றும் உலகின் போக்காக இது இருந்தது.
  • மேலும் இந்த நோய் ஆரம்ப காலத்தில் முழுவதுமாக கண்டறியப்பட்டால் 100 சதவிகிதம் குணப்படுத்தக் கூடியது என்று WHO கூறியுள்ளது.
  • தொழுநோய் என்பது தோல், புற நரம்புகள், மேல் சுவாசக் குழாயின் மேற்பரப்பு மற்றும் கண்கள் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய நாள்பட்ட தொற்று நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்