சர்வதேச ஆண்கள் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 19-ம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர சர்வதேச நிகழ்வாகும்.
இது நேர்மறையான முன்மாதிரிகளை அடையாளங் காட்டவும் ஆண்களின் நலன் பற்றிய விழிப்புணர்வை அதிகப்படுத்தவும் எண்ணுகின்றது.
2018-ம் ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு : ”நேர்மறையான ஆண் முன் மாதிரிகள்” என்பதாகும்.
1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாமஸ் ஒஸ்டர் என்பவரால் இத்தினத்தின் அனுசரிப்பு துவங்கப்பட்டது.
1999-ம் ஆண்டு டிரினிடாட் மற்றும் டொபாகோவைச் சேர்ந்த ஜெரோம் தீலக்சிங் என்பவரால் இத்தினத்திற்கான அனுசரிப்பு மறுமுறை துவங்கப்பட்டது.
அவர் தனது தந்தையின் பிறந்த தினத்தை கௌரவப்படுத்தவும் கால்பந்து உலகக் கோப்பையில் டிரினிடாட் மற்றும் டொபாகோ 1989 ஆம் ஆண்டு தகுதி பெற்றதை நினைவு கொள்ளவும் அத்தினத்தை தேர்ந்தெடுத்தார்.
சர்வதேச ஆண்கள் தினம், நவம்பர் 20-ம் தேதியன்று உலகளாவிய குழந்தைகள் தினத்தால் பின்தொடரப்படுகின்றது.