ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினைச் சர்வதேச குவாண்டம் (துளிம) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக (IYQ) அறிவித்துள்ளது.
UNGA ஆனது 2025 ஆம் ஆண்டானது "Cooperatives Build a Better World" என்ற கருத்துருவின் கீழ் சர்வதேசக் கூட்டுறவு ஆண்டாக (IYC2025) கொண்டாடப்படும் என்று அறிவித்தது.
ஐக்கிய நாடுகள் சபையானது 2025 ஆம் ஆண்டினை சர்வதேசப் பனிப்பாறைகள் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்துள்ளது.
இதனுடன் சேர்த்து, 2025 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி ஆனது உலகப் பனிப்பாறைகள் தினமாக கொண்டாடப் படும் என்றும பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு ஆனது இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் அங்கீகரிக்கப்பட்ட அதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
எனவே, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2025 ஆம் ஆண்டினைச் சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டாக (IYPT) அறிவித்துள்ளது.