ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இது ஆப்பிரிக்கக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்துவதற்கான இன்றியமையாத தேவையை உணர்த்துகிறது.
இது 1976 ஆம் ஆண்டில் நடைபெற்ற சோவெட்டோ எழுச்சியில் பங்கேற்பவர்களைக் கௌரவிக்கும் தினமாகும்.
ஆப்பிரிக்காவில் உள்ள கறுப்பின மக்களை விட வெள்ளையர்களுக்குத் தரமான கல்வியை வழங்கும் கல்வி முறையில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளை எதிர்த்து அவர்கள் போராடினர்.
இந்த ஆண்டிற்கான கருத்துரு: “Education for All Children in Africa: The Time is Now”.