TNPSC Thervupettagam

சர்வதேச ஆயுத பரிமாற்றங்களின் போக்குகள் – 2023

March 14 , 2024 126 days 211 0
  • உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் நாடு என்ற இடத்தினை இந்தியா தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், உலகளாவிய மொத்த ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்கு 9.8% ஆக இருந்தது.
  • இந்தியாவின் ஆயுத இறக்குமதி 2014-18 மற்றும் 2019-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 4.7% அதிகரித்துள்ளது.
  • இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 36 சதவீதப் பங்குடன் ரஷ்யா, இந்தியாவின் முக்கிய ஆயுத வழங்கீட்டு நாடாக உள்ளது.
  • 2019-23 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலம் ஆனது, 1960-64 ஆம் ஆண்டுகளில் இருந்து, ரஷ்ய ஆயுத விநியோகங்கள் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் பாதிக்கும் குறைவானப் பங்கு பதிவான முதல் ஐந்தாண்டு கால இடைவெளியைக் குறிக்கிறது.
  • பிரான்சு மற்றும் அமெரிக்கா ஆகியவை  இந்தியாவிற்கு ஆயுதம் வழங்கும் முக்கிய நாடுகளாக உருவாகி வருகின்றன. இரண்டு நாடுகளும் சேர்த்து இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் 46% பங்கினை வகிக்கின்றன.
  • ஆயுத இறக்குமதியில் முதல் இடத்தைக் கொண்டுள்ள இந்தியாவினைத் தொடர்ந்து சவூதி அரேபியா, கத்தார், உக்ரைன், பாகிஸ்தான், ஜப்பான், எகிப்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.
  • முன்னணி ஆயுத ஏற்றுமதி நாடுகளில், அமெரிக்கா 42% பங்குகளுடன் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து பிரான்சு மற்றும் ரஷ்யா உள்ளன.
  • அமெரிக்கா (42%), பிரான்சு (11%), ரஷ்யா (11%), சீனா (5.8%), ஜெர்மனி (5.6%), இத்தாலி (4.3%), ஐக்கியப் பேரரசு (3.7%), ஸ்பெயின் (2.7%), இஸ்ரேல் (2.4%), மற்றும் தென் கொரியா (2%) ஆகிய நாடுகள் ஆயுத ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன.
  • பாகிஸ்தான் நாட்டிற்கான முதன்மை ஆயுத வழங்கீட்டு நாடாக சீனா முக்கிய பங்கு வகிக்கிறது. சீனாவின் ஏற்றுமதியில் 61% பங்கு பாகிஸ்தானிற்கு வழங்கப்படுகிறது.
  • இந்தியாவின் பாதுகாப்புத் துறைக்கான முதலீடுகள் 2001 ஆம் ஆண்டில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்து வெறும் 5,077 கோடி ரூபாய் மட்டுமே அந்நிய நேரடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்