TNPSC Thervupettagam

சர்வதேச ஆயுத பரிமாற்றத்தின் போக்குகள் - 2019

March 11 , 2020 1628 days 580 0
  • ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (Stockholm International Peace Research Institute - SIPRI) புதிய தரவுகளின் படி, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்துள்ளன.
  • இந்த அறிக்கையின் படி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் நாடாக இந்தியா உள்ளது.
  • 2015 - 19க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியச் சந்தைக்கு அதிக அளவு ஆயுதங்களை வழங்கிய நாடு ரஷ்யா என்று இந்த அறிக்கை கூறுகின்றது.
  • இந்தப் புதிய தரவானது மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆயுதங்களின் ஏற்றுமதியானது அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. சவூதி அரேபியா உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் நாடாக விளங்குகின்றது.
  • SIPRI என்பது மோதல்கள், ஆயுதங்கள், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் ஆயுதக் குறைப்பு பற்றிய ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு சுயாதீன சர்வதேச நிறுவனமாகும்.
  • இது 1966 ஆம் ஆண்டில் ஸ்வீடனில் நிறுவப்பட்டது.
  • கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஊடகங்கள் மற்றும் ஆர்வமுள்ள பொது மக்களுக்கு அரசுத் தரவுகளின் அடிப்படையில் தரவு, பகுப்பாய்வு மற்றும் பரிந்துரைகளை SIPRI வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்