TNPSC Thervupettagam

சர்வதேச ஆர்கானியா தினம் - மே 10

May 13 , 2023 468 days 188 0
  • மொராக்கோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இணைந்து சர்வதேச ஆர்கானியா தினத்தினைக் கொண்டாடுகின்றன.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "உள்ளூர் சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் ஆர்கான் சுற்றுச்சூழல் அமைப்பின் நிலைத்தன்மை" என்பதாகும்.
  • சமூக மேம்பாடு மற்றும் நிலைத்தன்மையில் ஆர்கன் மரத்தின் பங்கினை முன்னிலைப் படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொண்டாட்டமானது, ஆர்கான் மரத்தினை அந்த நாட்டினைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரமாக மேம்படுத்துவதற்காக மொராக்கோ நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முன்னிலைப் படுத்துகிறது.
  • ஆர்கான் மரம் சார்ந்தத் தயாரிப்புகளுக்கான உலகின் முக்கிய ஒரு ஏற்றுமதியாளராக விளங்குவதால், ஆர்கான் மரங்கள் மொராக்கோ மற்றும் மொராக்கோ கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தினைப் பெற்றுள்ளன.
  • மொராக்கோ நாட்டின் வருடாந்திர ஆர்கன் எண்ணெய் உற்பத்தி 4,000 முதல் 6,000 டன்கள் வரை இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • யுனெஸ்கோ அமைப்பானது 2014 ஆம் ஆண்டில் மனிதகுலத்தின் மகத்தான கலாச்சாரப் பாரம்பரியத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் ஆர்கான் மரத்தினைச் சேர்த்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்