சர்வதேச ஆற்றல் மன்ற அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பு
April 24 , 2018 2410 days 729 0
அமெரிக்கா மற்றும் சீனாவிற்குப்பிறகு ஆற்றல் நுகர்வில் உலக அளவில் மூன்றாவது பெரிய ஆற்றல் நுகர்வோரான இந்தியா 16-வது சர்வதேச ஆற்றல் மன்றத்தின் (International Energy Forum - IEF) அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை அண்மையில் புதுதில்லியில் நடத்தியுள்ளது.
இச்சந்திப்பு முறைப்படி பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தியா சர்வதேச ஆற்றல் மன்ற அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை இரண்டாவது முறையாக நடத்தியுள்ளது. இதற்கு முன்னர் இந்தியா 5-வது சர்வதேச ஆற்றல்மன்றத்தின் அமைச்சர்களுக்கிடையேயான சந்திப்பை 1996 ஆம் ஆண்டு கோவாவில் நடத்தியது.
2018-ஆம் ஆண்டிற்கான இச்சந்திப்பின் கருத்துரு “உலகளாவிய ஆற்றல் பாதுகாப்பு மாற்றம், தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றின் எதிர்காலம்” (The Future of Global Energy Security: Transition, Technology, Trade and Investment) என்பதாகும்.
42 நாடுகளைச் சேர்ந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பானது சீனா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் கூட்டுறவோடு இந்தியாவால் நடத்தப்பட்டுள்ளது.
இச்சந்திப்பானது அறிவாற்றல் மற்றும் அனுபவப்பகிர்வு ஆகியவற்றின் மூலமாக கொள்கைகள் மற்றும் முதலீட்டு முடிவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது.