TNPSC Thervupettagam

சர்வதேச ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நிலை குறித்த அறிக்கை

March 28 , 2019 1941 days 618 0
  • சர்வதேச ஆற்றல் நிறுவனமானது (International Energy Agency - IEA) சர்வதேச ஆற்றல் மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது எரிபொருள்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள், ஆற்றல் திறன் மற்றும் கார்பன் உமிழ்வுகள் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் உலகளாவிய போக்குகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகிறது.
  • 2018 ஆம் ஆண்டில் உலக அளவில் ஆற்றல் நுகர்வானது 2.3 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. இது 2010 ஆம் ஆண்டு முதல் சராசரி வளர்ச்சி விகிதத்தை விட இரு மடங்காகும்.
  • இந்த அறிக்கையின்படி இந்தியாவின் ஆற்றல் தேவையானது உலக ஆற்றல் தேவையை விட முந்தி விட்டது.
  • ஆற்றல் தேவை வளர்ச்சியில் 70 சதவிகிதத்தை இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கொண்டுள்ளன.
  • இவ்வாறு வளர்ச்சி விகிதம் இருந்தாலும் இந்தியாவில் ஒருவர் வெளியிடும் உமிழ்வுகளானது உலக சராசரியில் 40 சதவிகிதம் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்