உலகப் பொருளாதார மன்றமானது (World Economic Forum) ஆற்றல் மாற்றக் குறியீடு என்ற தலைப்பு கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையானது 115 நாடுகளின் ஆற்றல் துறைகளை ஒப்பிட்டு, ஆற்றல் மாற்றத்திற்கான அந்த நாடுகளின் தயார் நிலையை ஆய்வு செய்கிறது.
சர்வதேச ஆற்றல் மாற்றக் குறியீட்டில் இந்தியா இரண்டு இடங்கள் முன்னேறி 76-வது இடத்தில் உள்ளது.
சுற்றுச்சூழல் நிலைப்புத் தன்மையுடன் ஆற்றலைப் பயன்படுத்துதல் மற்றும் சரி சமமான ஆற்றல் பாதுகாப்பு ஆகியவற்றில் உலக நாடுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் அடிப்படையில் நாடுகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன.