1960 ஆம் ஆண்டின் இதே தினத்தில் தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லி என்ற ஒரு நகரில் நிறவெறிச் சட்டங்களுக்கு எதிராக அமைதியான முறையில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.
1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்தத் தினத்தினை நியமித்தது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு: "உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 75வது ஆண்டு விழா - இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கான ஓர் ஊக்கம்" என்பதாகும்.