1960 ஆம் ஆண்டு இதே நாளில், தென்னாப்பிரிக்காவின் ஷார்ப்வில்லியில், நிறவெறி சார்ந்த "வெள்ளையர் அல்லாதவருக்கான அனுமதி வழங்கீட்டுச் சட்டங்களுக்கு" எதிராக அமைதியான முறையில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தி 69 பேரைக் கொன்றது.
1979 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது இனவெறி மற்றும் இனப் பாகுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கான திட்டத்தை ஏற்றுக்கொண்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: " பத்தாண்டு கால அங்கீகாரம், நீதி மற்றும் மேம்பாட்டு: ஆப்பிரிக்க வம்சாவளி மக்களுக்கான சர்வதேசத் தசாப்தத்தைச் செயல்படுத்துதல்" என்பதாகும்.