TNPSC Thervupettagam

சர்வதேச இயக்கப் படங்கள் தினம் - அக்டோபர் 28

October 29 , 2022 666 days 235 0
  • இயக்கப் படங்கள் முதல் முறையாக மக்கள் மத்தியில் அறிமுகமான தினத்தை இது நினைவு கூருகிறது.
  • இது 1892 ஆம் ஆண்டு அக்டோபர் 28 ஆம் தேதியன்று, பாரீஸில் உள்ள கிரெவின் அருங் காட்சியகத்தில், சார்லஸ்-எமைல் ரெய்னாட், அவரது தியேட்ரே ஆப்டிக் மூலம் தனது முதல் தயாரிப்பான "பாண்டோமிம்ஸ் லுமினியஸ்" என்ற படத்தினை வெளியிட்டார்.
  • இது இயக்கப்படக் கலையைக் கொண்டாடுவதையும், அவற்றின் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள கலைஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை அங்கீகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டு 20வது சர்வதேச இயக்கப்படங்கள் தினத்தைக் குறிக்கிறது.
  • சர்வதேச இயக்கப்படங்கள் திரைப்படச் சங்கமானது (ASIFA) 2002 ஆம் ஆண்டில் இந்தத் தினத்தினை உருவாக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்