TNPSC Thervupettagam

சர்வதேச இராணுவ விளையாட்டுகள் - 2018

July 24 , 2018 2220 days 624 0
  • இரஷ்யா மற்றும் மற்ற ஆறு நாடு நாடுகளில் நடைபெறும் இராணுவ விளையாட்டுகளில் பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் பங்கேற்கிறது.
  • வருடாந்திர நிகழ்ச்சியான சர்வதேச இராணுவ விளையாட்டுகள் 2018 ஆனது ரஷ்யா, சீனா, அர்மெனியா, அஸ்பர்ஜான், பெலாரஸ், ஈரான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெறும்.
  • இராணுவ விளையாட்டுகள் 2014ஆம் ஆண்டு இரஷ்யாவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வருடம் சீனா, ரஷ்யா, அஸ்பர்ஜான், பெலாரஸ், கஜகஸ்தான், ஈரான் மற்றும் அர்மெனியா ஆகிய நாடுகள் இணைந்து இவ்விளையாட்டை நடத்துகின்றன.
  • இராணுவ விளையாட்டுகள் தொடங்கப் பட்டதிலிருந்து இந்திய ஆயுதப் படை இதில் பங்கேற்று வருகிறது.
  • இந்த வருடம், இந்தியா சார்பில் இரண்டு நிகழ்ச்சிகளில் முழுவதுமாக பங்கு கொள்ள முடிவு செய்திருக்கிறது. (டேங்க் பய்த்லான் மற்றும் எல்பரஸ் ரிங்)
  • முதன்முறையாக அர்மெனியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் போட்டியை தங்கள் நாடுகளில் நடத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்