TNPSC Thervupettagam

சர்வதேச இருபது 20 உலகக் கோப்பை வெற்றியாளர்

November 19 , 2022 608 days 271 0
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டின் இருபது 20 சர்வதேச உலகக் கோப்பையை இங்கிலாந்து அணியானது பாகிஸ்தான் அணியை வீழ்த்திக் கைப்பற்றி உள்ளது.
  • இங்கிலாந்து அணியானது இரண்டாவது முறையாக இருபது 20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
  • இங்கிலாந்து அணியின் சாம் கரான் ஆட்ட நாயகன் விருதிற்கும் தொடர்நாயகன் விருதிற்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • இங்கிலாந்து மட்டுமே உலகளவில் இரண்டு வெள்ளைப் பந்து கோப்பைகளை வென்ற முதல் அணியாகும் (50 மற்றும் 20)
  • 2019 ஆம் ஆண்டில் தங்களது தாய் மண்ணில் அவர்கள் 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றனர்.
  • இருபது 20 உலகக் கோப்பையை இரண்டு முறை வென்ற வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்குப் பிறகு இரண்டாவது அணி இங்கிலாந்து மட்டுமே ஆகும்.
  • சர்வதேசக் கிரிக்கெட் குழுமத்தின் இருபது 20 உலகக் கோப்பைக்கான மிகுந்த மதிப்பு மிக்க அணியில், இந்தப் போட்டியின் முன்னணி ரன் குவிப்பு வீரர்களான விராட் கோலி மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்