சர்வதேச இளையோர் தினமானது 1965 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டதாக அறியப் படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையானது உலகளாவிய இளையோர் சமூகத்தைத் தரம் உயர்த்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை முன்னெடுத்தது.
அமைதி, பரஸ்பர மரியாதை மற்றும் மக்களிடையேயான புரிந்துணர்வு போன்ற பல கொள்கைகளை இளையோர்களிடையே ஊக்குவிப்பதற்கான பிரகடனத்திற்கு ஒப்புதல் வழங்கப் பட்டதையடுத்து இது உச்சம் பெற்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'இளையோருக்கானப் பசுமைத் திறன்கள்: நிலையான உலகை நோக்கி' என்பதாகும்.