உலகினுடைய உயிரிப் பல்வகைத் தன்மை தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி உலக மக்களிடையே விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே 22-ஆம் தேதி உலகம் முழுவதும் உயிரிப் பல்வகைத்தன்மை தினம் கொண்டாடப்படுகின்றது.
இவ்வாண்டு இத்தினமானது 1992-ஆம் ஆண்டு, மே மாதம் 22-ஆம் தேதி, நைரோபியில் உள்ள ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் தலைமையகத்தில் உயிரியல் பல்வகைத் தன்மைக்கான உடன்படிக்கை அமல்பாட்டிற்கு வந்து 25 வருடங்கள் நிறைவுற்றிருப்பதை குறிக்கவும் இந்த உடன்படிக்கையினுடைய குறிக்கோளை அடைவதில் தேசியம் மற்றும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட முன்னேற்றத்தினை முன்னிலைப்படுத்தி காட்டவும் கொண்டாடப்படுகின்றது.
இத்தினத்தன்று கங்கை தூய்மைக்கான தேசிய திட்ட அமைப்பு மற்றும் உலக வனவிலங்கு நிதிக் கூட்டமைப்பு - இந்தியா அமைப்பு ஆகியவை கூட்டிணைந்து “கங்கா மற்றும் அதன் உயிரி பல்வகைத்தன்மை வாழிட மற்றும் உயிரின பாதுகாப்பிற்கு வரைபடத்தினை தயாரித்தல்” எனும் தலைப்பில் ஓர் பயிற்சிப் பட்டறையை புதுதில்லியில் நடத்தியுள்ளன.