TNPSC Thervupettagam

சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மை தினம் - மே 22

May 26 , 2022 823 days 345 0
  • பல்லுயிர்த் தன்மைப் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் புரிதலை அதிகரிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 1993 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், டிசம்பர் 29 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் இரண்டாவது குழுவால் இத்தினம் முதன்முதலில் உருவாக்கப் பட்டது.
  • இந்த தேதி உயிரியல் பன்முகத்தன்மை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாளினைக் குறிக்கிறது.
  • ஆரம்பத்தில் இந்தத் தேதியே சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மைத் தினமாக நியமிக்கப் பட்டது.
  • 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மே 22 ஆம் தேதியினை சர்வதேச உயிரியல் பன்முகத் தன்மைத் தினமாக ஏற்றுக் கொண்டது.
  • 2022 ஆம் ஆண்டின் கருத்துரு, "அனைத்து உயிர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட ஒரு எதிர்காலத்தை உருவாக்குதல்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்