கிராமப்புற குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் நீடித்த நிலைத்தன்மையை உறுதி செய்வதிலும், கிராமப்புற வாழ்வாதாரத்தையும், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் மேம்படுத்துவதிலும் பெண்கள் ஆற்றும் பங்கினை அங்கீகரிக்கும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி சர்வதேச ஊரக பெண்கள் தினம் என கொண்டாடப்படுகிறது.
2017 ஆம் ஆண்டிற்கான ஊரக பெண்கள் தினத்தின் கருத்துரு- “காலநிலை–நெகிழ்ச்சியுடைய வேளாண்மையில் ஊரக பெண்கள் மற்றும் சிறுமிகளின் மேம்பாடு, பாலின சமத்துவம் போன்றவற்றிற்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகள்”.
ஐநா பொது அவையால் சர்வதேச ஊரக பெண்கள் தினம் நிறுவப்பட்டு அக்டோபர் 15, 2008 அன்று முதன்முதலில் கடைபிடிக்கப்பட்டது.
ஐ.நா அவையின் கருத்துப்படி, வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, உணவு பாதுகாப்பை அடைதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றை இலக்காக கொண்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்கின் (SDG-Sustainable Development Goal) தொலை நோக்கு பார்வையை அடைய ஊரக பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஓர் கட்டாய முன் தேவையாகும்.