TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09

December 12 , 2018 2175 days 1393 0
  • ஊழல் பற்றிய பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகமெங்கிலும் டிசம்பர் 09 ஆம் நாள் சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இது ஊழல்களை திறம்பட தடுக்கவும் அதனை எதிர்த்துப் போராடவும் வேண்டி அதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி ஐ.நா.வின் ஊழல் தடுப்பு உடன்படிக்கை (UN Convention Against Corruption-UNCAC) நிறைவேற்றப்பட்ட நாள் முதலாக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • UNCAC ஆனது சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தக்கூடிய சர்வதேச அளவிலான முதலாவது ஊழல் எதிர்ப்புக் கருவியாகும். இது உலகளாவிய அளவில் ஊழலுக்கெதிராக தீர்வளிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • ஐ.நா.வானது, ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP - United Nations Development Group) மற்றும் போதைப் பொருள்கள் & குற்றங்கள் மீதான ஐ.நா அலுவலகம் (UN Office on Drugs and Crimes -UNODC) ஆகியவற்றுடன் இணைந்து ஊழல் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்காக உலகளாவிய அளவிலான “ஊழல் : நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கு ஒரு தடை” எனும் பிரசாரத்தை உருவாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்