TNPSC Thervupettagam

சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் - டிசம்பர் 09

December 10 , 2019 1755 days 490 0
  • சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினமானது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 09 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் அனுசரிக்கப் படுகின்றது.
  • ஊழல் பற்றியும் அதை எதிர்த்துப் போராட மக்களால் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றியும் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினமானது கொண்டாடப் படுகின்றது.
  • இந்தத் தினமானது ஐ.நா பொதுச் சபையால் 2003 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த ஒப்பந்தமானது டிசம்பர் 2005 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (United Nations Development Program - UNDP) மற்றும் போதைப் பொருள் & குற்றங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (United Nations Office on Drugs and Crime - UNODC) ஆகியவற்றினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது.
  • இந்தத் தினமானது ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பின் கீழ் உலகம் முழுவதும் கொண்டாடப் படுகின்றது. இது 2030 ஆம் ஆண்டின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கைத் தலைமையாகக் கொண்டு ஊழலுக்கு எதிரான உலகளவிலான ஒரு போராட்டத்தை ஊக்குவிக்கின்றது.
  • 2018-2019 ஆம் ஆண்டிற்கான கருத்துரு, “ஊழலுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்