ஆண்டுதோறும் உலகம் முழுவதும் டிசம்பர் 9ஆம் தேதி ஊழலைப் பற்றியும், அவற்றை எதிர்த்து போராடுவதற்கான வழிகளைப் பற்றியும் விழிப்புணர்வை உண்டாக்க ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச ஊழல் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டிற்கான சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தின் கருத்துரு “வளர்ச்சி, அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஊழலுக்கு எதிராக ஒன்று படுதல்“ (United against Corruption for development, Peace & Security).
2003 அக்டோபர் 31ஆம் தேதி ஐ.நா.பொது அவை ஐ.நா.வின் ஊழலுக்கு எதிரான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
மேலும் இந்த உடன் படிக்கையின் உறுப்பினர் நாடுகளுக்கான செயலகமாக போதை பொருட்கள் மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா.அலுவலகத்தை (United Nations Office on Drugs and Crimes) நியமிக்கவும் பொதுச் செயலாளருக்கு பரிந்துரை அளிக்கப்பட்டது.
ஐ.நா.மேம்பாட்டு திட்டம் (United Nations Development Programme) மற்றும் போதை மற்றும் குற்றங்களுக்கான ஐ.நா.அலுவலகம் ஆகியவை ஊழல் ஒழிப்பு முயற்சிகளுக்கான முன்னணி சர்வதேச அமைப்பாகும்.