சர்வதேச எரிசக்தி முகமையின் அமைச்சர்கள் கூட்டம் 2024
February 20 , 2024 279 days 349 0
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) உறுப்பினர் நாடுகள் ஆனது, அமைப்பின் முழு உறுப்பினராக ஆவதற்காக இந்திய அரசினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மீதான விவாதங்களைத் தொடங்க ஒப்புக் கொண்டுள்ளன.
இந்திய நாடானது 2017 ஆம் ஆண்டில் சர்வதேச எரிசக்தி முகமையில் ஒரு இணை உறுப்பினராக சேர்ந்ததோடு, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதன் முழு உறுப்பினருக்கான முறையான கோரிக்கையையும் அனுப்பியது.
சர்வதேச எரிசக்தி முகமை என்பது 31 தொழில்மயமான நாடுகளை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.
சிலி, கொலம்பியா, இஸ்ரேல் மற்றும் லிதுவேனியா ஆகிய நான்கு நாடுகள் இதில் முழு உறுப்பினராக சேர முயன்று வருகின்றன.
31 உறுப்பினர் நாடுகளும் 13 இணை உறுப்பினர் நாடுகளும் உலகளாவிய எரிசக்தித் தேவையில் 75% பங்கினைக் கொண்டுள்ளன.
ஒரு நாடு IEA அமைப்பில் முழு உறுப்பினராக ஆவதற்கு, அந்நாடு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) உறுப்பினர் நாடாக இருக்க வேண்டும்.
உறுப்பினர் நாடுகள் முந்தைய ஆண்டின் நிகர இறக்குமதியின் 90 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்குச் சமமான கச்சா எண்ணெய் மற்றும்/அல்லது விளைபொருள் இருப்புக்களை (மூலோபாய எண்ணெய் இருப்புக்கள்) வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறையை IEA விதிக்கிறது.
இந்தியாவின் தற்போதைய மூலோபாய எண்ணெய் இருப்பு ஆனது, அதன் தேவையில் 9.5 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலேயே உள்ளது.
மேலும் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கிடங்குகளில் உள்ள சேமிப்புடன், 66 நாட்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்கு என்று சமமான ஒரு கையிருப்பைக் கொண்டுள்ளது.
IEA அமைப்பின் உறுப்பினர் நாடுகள் குறிப்பிடத் தக்க உலகளாவிய எண்ணெய் விநியோக சீர்குலைவுக்கான அவசரகால எதிர் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கச் செய்கின்றன.