சர்வதேச எரிசக்தி முகமையின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த அறிக்கை 2023
January 22 , 2024 307 days 248 0
புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திறன் சேர்க்கை ஆனது 2023 ஆம் ஆண்டில் உலகளவில் உயர்ந்து 507 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் சுமார் 50% அதிகரிப்பைக் குறிக்கிறது.
உலகளாவிய புதுப்பிக்கத்தக்க திறன் ஆனது 2028 ஆம் ஆண்டிற்குள் 7300 GW திறனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில், பல்வேறு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியானது நீர் மின்னாற்றலை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
2025 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆனது, நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியை விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக 2025 ஆம் ஆண்டில், காற்றாலை ஆற்றல் உற்பத்தி அணுமின் உற்பத்தியை விஞ்சும்.
2026 ஆம் ஆண்டில், சூரிய சக்தி உற்பத்தி ஆனது அணு மின் உற்பத்தியை மிஞ்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதியாக, 2028 ஆம் ஆண்டில், சூரிய சக்தி உற்பத்தி ஆனது காற்றாலை மின் உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2028 ஆம் ஆண்டில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வள ஆதாரங்கள் உலகளாவிய மின்சார உற்பத்தியில் 42% ஆக இருக்கும். காற்று ஆற்றல் மற்றும் சூரியசக்தியின் பங்கு 25% ஆக இருக்கும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு 14% மற்றும் ஜப்பான் 11% பங்குடன், பிராந்தியத்தின் வளர்ச்சியில் பாதியளவு பங்கை இந்தியா கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
இந்தியா, இந்தப் பங்கில் குறிப்பாக, 2023-2028 ஆம் ஆண்டுகளில் 205 GW திறன் புதுப்பிக்கத் தக்க ஆற்றலைச் சேர்க்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.