1953 ஆம் ஆண்டில் நியூசிலாந்து நாட்டினைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏறிய முதல் சாதனையினை இந்த நாள் நினைவுகூருகிறது.
எட்மண்ட் ஹிலாரி இறந்த 2008 ஆம் ஆண்டில் இந்த நாள் நிறுவப்பட்டது.
எவரெஸ்ட் சிகரம் இமயமலையின் ஒரு முக்கியப் பகுதியான மஹாலங்கூர் ஹிமால் உள் மலைத்தொடரில் அமைந்துள்ளது.
சீன-நேபாள எல்லையானது 8,848.86 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் மிக உயரமான இடத்தின் வழியாக கடப்பதாக பொதுவாக ஒப்புக் கொள்ளப் படுகிறது.