TNPSC Thervupettagam

சர்வதேச எவரெஸ்ட் தினம் - மே 29

May 31 , 2023 547 days 261 0
  • 1953 ஆம் ஆண்டில் நியூசிலாந்தைச் சேர்ந்த சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தினைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் ஏறிய தினத்தினை இந்த நாள் நினைவு படுத்துகிறது.
  • டென்சிங் நோர்கே, தனது 7வது முயற்சியில் தான் இச்சிகரத்தின் உச்சியை அடைந்தார்.
  • இறுதியாக டென்சிங்கின் பிறந்த நாளான 1953 ஆம் ஆண்டு மே 29 ஆம் தேதியன்று எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகிய இருவரும் இந்தச் சாதனையை நிகழ்த்தினர்.
  • எட்மண்ட் ஹிலாரி 2008 ஆம் ஆண்டில் உயிரிழந்ததையடுத்து இந்த நாள் நிகழ்கால நடைமுறைக்கு வந்தது.
  • நேபாள நாட்டினரால் சாகர்மாதா என்று அழைக்கப்படும் எவரெஸ்ட், பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் நில அளவையாளராக இருந்த சர் ஜார்ஜ் எவரெஸ்டின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டது.
  • திபெத்தில், இதற்கு சோமோலுங்மா அல்லது புனித தாய் என்று பெயர் வழங்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்