ஒவ்வொரு ஆண்டும் மே 29 அன்று சர்வதேச எவரெஸ்ட் மலை தினம் அனுசரிக்கப்படுகின்றது.
இது 1953 ஆம் ஆண்டு மே 29 அன்று நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் நோர்கே ஷெர்பா ஆகியோர் எவரெஸ்ட் மலையின் உச்சியை முதன்முறையாக அடைந்ததின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகின்றது.
புகழ்பெற்ற மலை ஏறும் வீரரான ஹிலாரி காலமான பின்பு 2008 ஆம் ஆண்டு முதல் இத்தினத்தை சர்வதேச எவரெஸ்ட் தினமாக அனுசரிக்க நேபாளம் முடிவு செய்தது.
1852 ஆம் ஆண்டில் வங்காளத்தைச் சேர்ந்த கணிதவியலாளரான ராதாநாத் சிக்தார் என்பவர் XV என்ற சிகரத்தின் உயரத்தைக் கணக்கிட்டார்.
இது இமயமலையில் உள்ள ஒரு பனிச் சிகரமாகும். உலகில் உள்ள மலைகளில் மிகப்பெரிய மலை இதுவாகும்.
இது 1830 முதல் 1843 ஆம் ஆண்டு வரை இந்திய நில அளவை இயக்குனராகப் பணியாற்றிய சர் ஜார்ஜ் எவரெஸ்ட் என்பவரின் நினைவாக எவரெஸ்ட் என்று பின்னாளில் பெயரிடப்பட்டது.