ஐக்கிய நாடுகளின் பொது அவை, தனது 57/129 என்ற எண் கொண்ட தீர்மானத்தின் மூலம் மே 29ம் தேதியை சர்வதேச ஐக்கியநாடுகளின் அமைதி காப்பாளர்களின் தினமாக அங்கீகாரமளித்தது.
1948ம் ஆண்டு இதே தினத்தில் UNTSO அல்லது United Nations Truce Supervision Organization எனப்படும் ஐக்கிய நாடுகள் இடைக்கால அமைதி மேற்பார்வை அமைப்பு முதல் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணியை பாலஸ்தீனத்தில் ஆரம்பித்தது.
இந்த மேற்பார்வை 1948ம் ஆண்டு நடந்த அரேபிய இஸ்ரேல் யுத்தத்திற்கு பிறகான போர் நிறுத்தத்தை கண்காணித்திட ஏற்படுத்தப்பட்டது.
இந்த தினம் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் தினமாக, உக்ரேனிய அமைதி காக்கும் சங்கமும் உக்ரேனிய அரசும் ஐக்கிய நாடுகள் பொது அவைக்கு அலுவல்பூர்வமாக வேண்டுகோள் விடுத்ததன் காரணமாக அங்கீகரிக்கப்பட்டது.
இது முதலில் 2003ம் ஆண்டு அனுசரிக்கப்பட்டது.
2018ம் ஆண்டிற்கான சர்வதேச ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் தினத்தின் கருத்துரு ‘சேவை மற்றும் தியாகத்தின் 70 வருடங்கள்’.