TNPSC Thervupettagam

சர்வதேச ஒப்பீட்டுத் திட்டம் (ICP)

June 26 , 2020 1616 days 671 0
  • உலக வங்கியானது அடிப்படை ஆண்டு 2017ற்கான புதிய வாங்கும் சக்திச் சமநிலையை (PPPs - Purchasing Power Parities) வெளியிட்டுள்ளது.
  • இது உலகப் பொருளாதார நாடுகளுக்கிடையே வாழ்வாதாரச் செலவின  வேறுபாடுகளைச் சரிசெய்யும் ICP-ன்  (International Comparison Program) கீழ் உள்ளது.
  • ICP என்பது ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு மிகப்பெரிய உலகளாவிய தரவுச் சேகரிப்பு முன்னெடுப்பாகும்.
  • இந்திய ரூபாயின் PPP மதிப்பு  ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP – Gross Domestic Product), 2017 ஆம் ஆண்டில் 1 டாலருக்கு நிகராக 20.65 ஆக உள்ளது. இது 2011 ஆம் ஆண்டில் 15.55 ஆக இருந்தது.  

இந்தியாவின் நிலை

  • 2017 ஆம் ஆண்டில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நிலையை இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இது PPP-ன் அடிப்படையில் உலகின் GDPயில் 6.7% (உலக அளவில் $ 119,547 பில்லியன் என்ற மதிப்பில் இந்தியாவின் மதிப்பு $ 8,051 பில்லியன்) என்ற அளவைக் கொண்டுள்ளது.
  • சீனா 16.4%யும் அமெரிக்கா 16.3%யும் கொண்டுள்ளன.
  • மேலும் இந்தியாவானது PPP-ன் உலகளாவிய அசல் தனிநபர் நுகர்வு மற்றும் உலகளாவிய நிகர மூலதன உருவாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாகவும் விளங்குகின்றது.

PPP பற்றி

  • ஒரு நாட்டின் நாணயமானது இரு நாடுகளிலும் (பல நாடுகளிலும்) ஒரே அளவுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் போன்றவற்றை வாங்குவதற்காக மற்றொரு நாட்டின் நாணயமாக மாற்றப்படும் விகிதம் என்று வரையறுக்கப்படுகின்றது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்