சர்வதேச ஒருநாள் (ODI) கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் – தோனி
July 18 , 2018 2326 days 715 0
லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது இந்தியாவின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 10,000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோருக்கு அடுத்து இச்சாதனையை புரிந்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் தோனி ஆவார்.
சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் (Oneday International) 10,000 ரன்களை எடுத்த இரண்டாவது விக்கெட் கீப்பர் தோனி ஆவார்.
மற்றொரு விக்கெட் கீப்பர் ஸ்ரீலங்காவின் குமார் சங்ககாரா ஆவார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 300 கேட்சுகளைப் பிடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்பது தோனி நிகழ்த்திய மற்றொரு சாதனையாகும்.
ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் பவுச்சர் மற்றும் குமார் சங்ககாரா ஆகியோருக்கு அடுத்து உச்ச நிலையை எட்டும் நான்காவது விக்கெட் கீப்பர் தோனி ஆவார்.