TNPSC Thervupettagam

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்களை வேகமாக அடைதல்

October 26 , 2018 2094 days 592 0
  • இந்திய கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 10000 ரன்களை துரிதமாக கடந்து சாதனை படைத்துள்ளார்.
  • இவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக தனது 205வதுப் போட்டியில் இச்சாதனையைப் படைத்தார்.
  • 2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தமது 259வதுப் போட்டியில் 10,000 ரன்களை கடந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை 29 வயதான கோலி முறியடித்தார்.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் கோலி ஆவார்.
  • கோலியைத் தவிர டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், MS தோனி ஆகியோரும் ஒருநாள் கிரிக்கெட்டில் 10000 ரன்களை கடந்தவர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்