புலம்பெயர்ந்த உயிரினங்கள் மற்றும் காட்டு விலங்குகளின் வளங்காப்பு மீதான மாநாட்டு அமைப்பானது (CMS) புலம்பெயர்ந்த இனங்களுக்கான சர்வதேச ஒளி மாசு வழிகாட்டுதல்களைத் தயாரித்துள்ளது.
இயற்கையான இருளானது சுத்தமான நீர், காற்று மற்றும் மண்ணுக்குச் சமமான வளங் காப்பு மதிப்பைக் கொண்டுள்ளது என்று CMS அமைப்பின் 14வது பங்குதாரகள் மாநாடு (COP14) குறிப்பிட்டுள்ளது.
1992 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், செயற்கை ஒளி உமிழ்வானது 49 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
இது வனவிலங்குகளின் நடத்தை மற்றும் உளவியல் மாற்றங்கள் உள்ளிட்ட மிகவும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
பறவைகள் தவிர, பாலூட்டிகள், ஊர்வன மற்றும் மீன் போன்ற பிற உயிரினங்களும் செயற்கை ஒளி உமிழ்வினால் பாதிக்கப்படக் கூடும்.