TNPSC Thervupettagam

சர்வதேச கடன் அறிக்கை 2022

December 28 , 2022 696 days 452 0
  • சர்வதேச கடன் அறிக்கை 2022 உலக வங்கியால் வெளியிடப்பட்டது.
  • துணை-சஹாரா ஆப்பிரிக்கா பகுதியில் (SSA) குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கடன் 2020 ஆம் ஆண்டில் $702 பில்லியனில் இருந்து 2021 ஆம் ஆண்டில் $789 பில்லியனாக அதிகரித்துள்ளது.
  • இது 2010 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிராந்தியத்தின் அதிக கடன் சுமையாகும்.
  • 2010 ஆம் ஆண்டில், இந்தப் பிராந்தியத்தின் கடன் சுமார் 305 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • 2021 ஆம் ஆண்டின் இறுதியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த வெளிநாட்டுக் கடன் $9 டிரில்லியன் ஆகும்.
  • பாரீஸ் மன்றத்தின் ஒரு உறுப்பினராக இல்லாத சீனா, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடாக மாறியுள்ளது.
  • மற்ற பாரீஸ் மன்றத்தின் உறுப்பினர் அல்லாத நாடுகளில் ரஷ்யா சராசரியாக $6.1 பில்லியனையும், சவூதி அரேபியா $2.5 பில்லியன்களையும், இந்தியா $2.4 பில்லியன்களையும் வழங்கிள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்