2024 ஆம் ஆண்டு சர்வதேச கடன் அறிக்கையானது உலக வங்கியால் வெளியிடப் பட்டு உள்ளது.
மிகக் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் (LMICs) கடன் மதிப்பானது, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 8.8 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன என்பதோடு இது 2020 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 8% அதிகமாகும்.
வெளிநாட்டுக் கடன் ஆனது 18% அதிகரித்து 1.1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.
இதன்படி 2023 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்ற கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 4 சதவீதத்திற்கும் அதிகமாக இரட்டிப்பாகியுள்ளன.
வட்டி விகிதங்கள் ஆனது சுமார் 6% ஆக உயர்ந்துள்ளன, இது 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிகம் ஆகும்.
இந்தியாவைப் பொறுத்தவரை, வெளிநாட்டுக் கடன் 31 பில்லியன் டாலர் அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் சுமார் 646.79 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
வட்டி வழங்கீடுகள் ஆனது, 2022 ஆம் ஆண்டில் 15.08 பில்லியன் டாலர்களிலிருந்து 2023 ஆம் ஆண்டில் 22.54 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளன.
நீண்ட காலக் கடன்கள் 7% அதிகரித்துள்ளதோடு, குறுகிய காலக் கடனில் சிறிது சரிவு ஏற்பட்டுள்ளது.