சர்வதேச கடன் அறிக்கை (IDR) என்பது உலக வங்கியினால் நீண்டகாலமாக வெளியிடப் படும் வருடாந்திர வெளியீடாகும்.
இது 122 நாடுகளுக்கான வெளிநாட்டுக் கடன் புள்ளிவிவரங்கள் மற்றும் பல்வேறு பகுப்பாய்வுகளைக் கொண்டுள்ளது.
கடன்-சேவை கொடுப்பனவுகள் - அசல் மற்றும் வட்டி உட்பட - 2022 ஆம் ஆண்டில் 5% உயர்ந்து 443.5 பில்லியன் டாலராக இருந்தது.
75 ஏழ்மையான நாடுகளின் வெளி நாட்டுப் பொதுக் கடன் சேவைத் தொகைகள் 2022 ஆம் ஆண்டில் 88.9 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டியது என்பதோடு மேலும் 2023-2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இது 40% அதிகரிக்கவும் செய்யும்.
2012 ஆம் ஆண்டில் இருந்து, அந்நாடுகளின் வட்டித் தொகை மட்டும் நான்கு மடங்கு அதிகரித்து 23.6 பில்லியன் டாலராக இருந்தது.
தனியார் துறை கடன் வழங்கு நிறுவனங்கள் கடனாக வழங்கியதை விட சுமார் 185 மில்லியன் டாலர்களை அசலாகத் திரும்பப் பெற்றுள்ளன.
ஒட்டுமொத்தமாக, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் இருந்து பத்திரதாரர்களுக்கு 127.1 பில்லியன் டாலர் நிகர நிதி வழங்கப்பட்டுள்ளது.
2019-2021 ஆம் காலகட்டத்தில் சராசரி நிதி வரவு 202 பில்லியன் டாலர் ஆகும்.
உலக வங்கி மற்றும் பிற பலதரப்பு கடன் வழங்குநர்கள், 2022 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளுக்கான புதிய நிதியுதவியில் 115 பில்லியன் டாலர்களை வழங்குவதன் மூலம் இடைவெளியை நிரப்ப உதவியது.