TNPSC Thervupettagam

சர்வதேச கடற்படுகை ஆணையம்

August 25 , 2017 2647 days 914 0
  • அரசுகளுக்கிடையேயான அமைப்பான (Intergovernmental body) சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Seabed Authority) ஆனது ஜமைக்காவின் கிங்ஸ்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
  • நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடற்படுகைப் பகுதியில் நடைபெறக்கூடிய அனைத்து வித உலோகம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தலுக்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பெற்றுள்ளது.
  • நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கடற்படுகை (sea bed), பெருங்கடலின் அடிப்பகுதி (ocean floor) மற்றும் அடிமண் (subsoil) போன்றவையே ஐ.எஸ்.ஏ எல்லைக்குட்பட்ட சர்வதேச கடற்படுகைப் பகுதி என்று கடல்சார் சட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCLOS) விவரிக்கின்றது.
  • கடல்சார் சட்டங்களின் மாநாட்டின்படி இந்த அமைப்பு தொடங்கப்பெற்றிருக்கிறது.
  • ஐநா அவையில் நோக்காளர் அந்தஸ்தினை இந்த அமைப்பு பெற்றிருக்கிறது.
  • கடந்தாண்டு, ஐ.எஸ்.ஏ வின் உறுப்பினர் குழுவில் இந்தியா மீண்டும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்