அரசுகளுக்கிடையேயான அமைப்பான (Intergovernmental body) சர்வதேச கடற்படுகை ஆணையம் (International Seabed Authority) ஆனது ஜமைக்காவின் கிங்ஸ்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.
நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடற்படுகைப் பகுதியில் நடைபெறக்கூடிய அனைத்து வித உலோகம் சார்ந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஒழுங்குபடுத்தவும் கட்டுப்படுத்தலுக்காகவும் இந்த அமைப்பு தொடங்கப்பெற்றுள்ளது.
நாடுகளின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட கடற்படுகை (sea bed), பெருங்கடலின் அடிப்பகுதி (ocean floor) மற்றும் அடிமண் (subsoil) போன்றவையே ஐ.எஸ்.ஏ எல்லைக்குட்பட்ட சர்வதேச கடற்படுகைப் பகுதி என்று கடல்சார் சட்டங்களுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு (UNCLOS) விவரிக்கின்றது.
கடல்சார் சட்டங்களின் மாநாட்டின்படி இந்த அமைப்பு தொடங்கப்பெற்றிருக்கிறது.
ஐநா அவையில் நோக்காளர் அந்தஸ்தினை இந்த அமைப்பு பெற்றிருக்கிறது.
கடந்தாண்டு, ஐ.எஸ்.ஏ வின் உறுப்பினர் குழுவில் இந்தியா மீண்டும் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது.