இந்திய நாடானது, சர்வதேச கடல்சார் அமைப்பு சபைக்கு 2024-25 ஆகிய இரண்டாண்டு காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த மறுதேர்தல் ஆனது, “சர்வதேச கடல் சார் வர்த்தகத்தில் மிகப் பெரிய அளவிலான ஈடுபாடு கொண்ட 10 நாடுகளில் ஒன்றாகவும்”, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்சு, ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளில் ஒன்றாகவும் இந்திய நாட்டினை இடம் பெற வைக்கிறது.
2030 ஆம் ஆண்டு கடல்சார் இந்தியா தொலைநோக்குத் திட்டத்தின் கீழ், இலண்டனில் உள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைமையகத்தில் நிரந்தரப் பிரதிநிதிகளை நியமிப்பதன் மூலம் இந்தியா சர்வதேச கடல்சார் அமைப்பில் அதன் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.