சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி - IMMSAREX
August 14 , 2017 2662 days 949 0
இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (Indian Ocean Naval Symposium - IONS) தற்போதைய தலைமைப் பொறுப்பினை வங்காளதேசம் வகித்து வருகிறது. இந்நிலையில் வங்காள தேசம் சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியினை (International Maritime Search and Rescue Exercise - IMMSAREX) நவம்பர் மாதம் வங்காள விரிகுடா பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர் நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.
மீட்பு நடவடிக்கைகள் பயிற்சியில் பார்வையாளராக (Observer) சீனா கலந்துகொள்ள உள்ளது.
இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு
இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். இவ்வமைப்பு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தற்சமயம் இந்த அமைப்பில் 23 உறுப்பினர்களும், 9 பார்வையாளர்களும் உள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளின் சார்பாக அந்தந்த நாட்டின் கடற்படைத் தளபதிகள் கலந்துக் கொள்கின்றனர். உறுப்பினர் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிப்பது இந்தக் கருத்தரங்கின் நோக்கம் ஆகும்.
மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief - HADR), தகவல் பாதுகாப்பு மற்றும் இயங்குத்தன்மை (Information Security and Interoperability - IS&I) மற்றும் கடற்கொள்ளைத் தடுப்பு (Anti-Piracy) ஆகிய செயற்குழுக்கள் ‘கடல் பாதுகாப்பு’ என்ற ஒரு குழுவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.