TNPSC Thervupettagam

சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சி - IMMSAREX

August 14 , 2017 2513 days 859 0
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் (Indian Ocean Naval Symposium - IONS) தற்போதைய தலைமைப் பொறுப்பினை வங்காளதேசம் வகித்து வருகிறது. இந்நிலையில் வங்காள தேசம் சர்வதேச கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பயிற்சியினை (International Maritime Search and Rescue Exercise - IMMSAREX) நவம்பர் மாதம் வங்காள விரிகுடா பகுதியில் நடத்த திட்டமிட்டுள்ளது.
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர் நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன.
  • மீட்பு நடவடிக்கைகள் பயிற்சியில் பார்வையாளராக (Observer) சீனா கலந்துகொள்ள உள்ளது.
 
  • இந்தியப் பெருங்கடல் கடற்படை கருத்தரங்கு
  • இது இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். இவ்வமைப்பு 2008 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • தற்சமயம் இந்த அமைப்பில் 23 உறுப்பினர்களும், 9 பார்வையாளர்களும் உள்ளனர்.
  • இந்தியப் பெருங்கடல் கரையோர நாடுகளின் சார்பாக அந்தந்த நாட்டின் கடற்படைத் தளபதிகள் கலந்துக் கொள்கின்றனர். உறுப்பினர் நாடுகளுக்கு இடையே இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிப்பது இந்தக் கருத்தரங்கின் நோக்கம் ஆகும்.
  • மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணம் (Humanitarian Assistance and Disaster Relief - HADR), தகவல் பாதுகாப்பு மற்றும் இயங்குத்தன்மை (Information Security and Interoperability - IS&I) மற்றும் கடற்கொள்ளைத் தடுப்பு (Anti-Piracy) ஆகிய செயற்குழுக்கள் ‘கடல் பாதுகாப்பு’ என்ற ஒரு குழுவின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்