சர்வதேச கர்நாடக சுற்றுலாக் கண்காட்சி இந்த ஆண்டின் பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி நடத்தப்படும் என கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடகாவிலுள்ள வன உயிர்கள், வரலாற்றுப் புராதனங்கள், யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய நினைவிடங்கள் போன்றவற்றின் மீது முக்கியத்துவத்தைச் செலுத்தி சுற்றுலாப் பயணிகளுக்கான ஓர் முதன்மைத் தேர்வாகக் கர்நாடகாவை உலக அளவில் முன்னெடுத்துக் காட்டுவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.
இதுவே இந்தியாவின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களுக்கிடையேயான (B2B-Business to Business) நிகழ்வாகும். சுற்றுலா மற்றும் பயணங்கள் தொடர்பான இத்தகையப் பெரிய நிகழ்வு இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.