TNPSC Thervupettagam

சர்வதேச கலா மேளா திருவிழா

February 5 , 2018 2357 days 694 0
  • முதல் சர்வதேச கலா மேளா திருவிழா (International Kala Mela) அண்மையில் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
  • மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் (Indra Gandhi National Centre for Arts) இணைந்து லலித் கலா மேளா அகாடமியானது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்துள்ளது.

திருவிழாவைப் பற்றி

  • கலைஞர்களுக்கும் (Artist) கலை வல்லுநர்களுக்கும் இடையே (Connoisseur) நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும், லலித் கலா அகாடமியின் முக்கிய பணியான கலைகளைப் பற்றிய விழிப்புணர்வையையும், கலைகள் குறித்த அறிவூட்டலையும் மக்களிடையே மேற்கொள்வதற்காகவும் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
  • பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்களுடைய கலை வேலைப்பாடுகளை காட்சிப்படுத்த ஓர் மேடையை இத்திருவிழா வழங்குகின்றது.

லலித் கலா மேளா அகாடமி

  • லலித் கலா மேளா அகாடமி (அல்லது) கலைகளுக்கான தேசிய அகாடமியானது இந்தியாவின் கவின் கலைகளுக்கான (Fine Arts) தேசிய அகாடமியாகும்.
  • உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டளவிலும் இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றை பரப்புவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் 1954 ஆம் ஆண்டு புது தில்லியில் ஓர் தன்னாட்சியுடைய நிறுவனமாக லலித் கலா அகாடமி அமைக்கப்பட்டது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்