முதல் சர்வதேச கலா மேளா திருவிழா (International Kala Mela) அண்மையில் புதுதில்லியில் நடத்தப்பட்டது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் (Indra Gandhi National Centre for Arts) இணைந்து லலித் கலா மேளா அகாடமியானது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்துள்ளது.
திருவிழாவைப் பற்றி
கலைஞர்களுக்கும் (Artist) கலை வல்லுநர்களுக்கும் இடையே (Connoisseur) நேரடி தொடர்பை ஏற்படுத்துவதற்காகவும், லலித் கலா அகாடமியின் முக்கிய பணியான கலைகளைப் பற்றிய விழிப்புணர்வையையும், கலைகள் குறித்த அறிவூட்டலையும் மக்களிடையே மேற்கொள்வதற்காகவும் இத்திருவிழா நடத்தப்படுகிறது.
பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச கலைஞர்கள் தங்களுடைய கலை வேலைப்பாடுகளை காட்சிப்படுத்த ஓர் மேடையை இத்திருவிழா வழங்குகின்றது.
லலித் கலா மேளா அகாடமி
லலித் கலா மேளா அகாடமி (அல்லது) கலைகளுக்கான தேசிய அகாடமியானது இந்தியாவின் கவின் கலைகளுக்கான (Fine Arts) தேசிய அகாடமியாகும்.
உள்நாட்டு அளவிலும் வெளிநாட்டளவிலும் இந்தியாவின் கலைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவதற்காகவும், அவற்றை பரப்புவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் 1954 ஆம் ஆண்டு புது தில்லியில் ஓர் தன்னாட்சியுடைய நிறுவனமாக லலித் கலா அகாடமி அமைக்கப்பட்டது.