ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று, உலக நாடுகள் சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தினைக் கொண்டாடுகின்றன.
இது கழுகுகளின் முக்கியத்துவம் மற்றும் அவை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
உலகளவில் உள்ள 23 கழுகு இனங்களில், பாதிக்கும் மேற்பட்டவை IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அச்சுறுத்தல் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் பட்டியலிடப் பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 246 ஆக இருந்த கழுகுகளின் எண்ணிக்கை என்பது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 308 ஆக அதிகரித்துள்ளது.
முதுமலை-சத்தியமங்கலம்-பந்திப்பூர்-வயநாடு வளாகத்தில் 82% அளவில் கழுகுகள் இருப்பதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.