சிறந்த காபி கொட்டைகளைப் பயிரிடுவதற்காக இரவு பகலாகப் பணியாற்றும் காபி விவசாயிகளை மதிப்பதையும் கௌரவிப்பதையும் நினைவூட்டும் விதமாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இந்தத் தினமானது காபியின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும், நிலையான காபி உற்பத்தி நடைமுறைகள் பற்றிய விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "காபி விநியோகச் சங்கிலியில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலுக்கான முக்கிய உரிமையை ஊக்குவித்தல்" என்பதாகும்.