“சர்வதேச காற்றின் நிலைமை” என்ற அறிக்கையின்படி 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் வீட்டிற்கு வெளியே மற்றும் வீட்டிற்குள்ளே ஏற்பட்ட காற்று மாசுபாட்டின் காரணமாக 1.2 மில்லியன் இறப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த அறிக்கையானது அமெரிக்காவில் உள்ள சுயாதீன, இலாப நோக்கில்லா ஆராய்ச்சி நிறுவனமான சுகாதார விளைவு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வானது தற்பொழுதுள்ள அதிக அளவு காற்று மாசுபாட்டின் காரணமாக தெற்காசியாவில் உள்ள குழந்தைகளின் சராசரி வாழ்வானது 2 ஆண்டுகள் 6 மாதங்கள் அளவிற்கு குறையும் என்று கூறுகிறது.
ஏராளமான காற்று மாசுபாட்டினால் ஏற்படக்கூடிய இறப்புகளுக்கு PM 2.5 காரணமாகும். PM 2.5-ன் சரிபாதி உற்பத்தியானது இந்தியா மற்றும் சீனாவில் நிகழ்கிறது.
உலகளவில் மனிதனால் ஏற்படும் காற்று மாசுபாட்டினால் 65 சதவிகித இறப்புகளுக்கு புதைபடிவ எரிபொருள்களால் உற்பத்தி செய்யப்படும் உமிழ்வுகளே காரணமாகும்.
இந்தியா மாசுபாடு மற்றும் மாசுபாட்டு ஆதாரங்களைக் களைவதற்காக பின்வரும் முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா.
விரைவான பாரத் நிலை VI தூய்மை வாகனத் தர நிலைகள்.
தேசியத் தூய்மைக் காற்றுத் திட்டம்.
PM 2.5
PM 2.5 ஆனது 2.5 மைக்ரோ மீட்டருக்குக் குறைவான விட்டம் கொண்ட வளிமண்டல நுண்துகளைக் குறிக்கிறது.
இந்தத் துகள்களை ஒரு எலக்ட்ரான் நுண்ணோக்கியினால் மட்டுமே கண்டறிய முடியும்.
இத்துகள் மனிதன் மற்றும் விலங்குகள் சுவாசிக்கும் போது 2.5 அளவிலான நுண் துகள்களை எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இந்த நுண் துகள்களானது ஆஸ்துமா, மாரடைப்பு, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் பிற சுவாசப் பிரச்சனைகள் போன்ற நீண்ட கால நோய்களை அல்லது மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதற்காக அறியப்படுகின்றது.