கிப்பன் குரங்குகள் ஹைலோபாடிடே குடும்பத்தினைச் சேர்ந்த குரங்குகள் ஆகும்.
20 வெவ்வேறு வகையான கிப்பன் குரங்கினங்கள் உள்ளன என்ற நிலைமையில் அவை தெற்காசியாவின் வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டல மழைக் காடுகளில் காணப் படுகின்றன.
இந்தியாவின் ஒரே (வாலில்லாக் குரங்கு) குரங்கு இனமான, வெஸ்டர்ன் ஹூலாக் கிப்பன் IUCN அமைப்பின் செந்நிறப் பட்டியலில் அருகி வரும் நிலையில் உள்ள ஒரு இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் சுமார் 3,000க்கும் குறைவான கிப்பன் குரங்குகளே உள்ளன என்பதோடு அவை பொதுவாக வடகிழக்கு மாநிலங்களில் காணப்படுகின்றன.